1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக திகழ்கின்றனர் - முதல்வர் ஸ்டாலின்..!

1

தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், மாணவ மாணவிகள் உயர்ந்தால் அது ஆசிரியர்களுக்கு தான் பெருமை அத்தகைய ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்கள் என்றார்.

தமிழக மாணவ மாணவிகள் படிப்பில் உயர்ந்துள்ளனர் என்றும் தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக திகழ்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் 54 மாற்றுத்திறனாளி அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என்றும் மாணவர்கள் நாட்டின் எதிர்கால சொத்துக்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது என்றும் உயர்கல்வியில் சேர்வதில் தமிழ்நாடுதான் இந்தியாவில் அதிகம் என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் 2023 ஆம் ஆண்டில் உயர்கல்வி சென்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 274 ஆக இருந்தது என்றும் இந்த ஆண்டு இரு மடங்காகி 447 ஆக அதிகரித்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகை உள்ளிட்ட திட்டங்களால் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஐஐடி, ஐஏஎம் மட்டுமல்லாமல் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மேலும் 14 மாணவர்கள் மலேசியா, ஜப்பான், தைவான் நாடுகளில் உயர்க்கல்வி பயில முழுமையான கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிவின் சொத்துக்களாக மாணவர்களை பார்க்கும்போது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தான் எப்போதும் துணை நிற்பேன் என்றும் வரும் காலங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள்தான் அனைத்து துறைகளிலும் முன்னுரிமை பெறுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like