1. Home
  2. தமிழ்நாடு

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு நிபந்தனை ஜாமீன்..!

1

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூருவைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து நேரில் ஆஜராக வேண்டுமென தொடர்ந்து 3-வது முறையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக கோர்ட்டில் நேற்று ஆஜரானர். எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில்  ஆஜரானார். இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ரூ. ஒரு லட்சம் பிணைத்தொகையுடன் ஜாமீன் வழங்கிய கோர்ட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. 

Trending News

Latest News

You May Like