1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு SI தேர்வு 2025 அறிவிப்பு வெளியீடு; 1,299 காலிப்பணியிடங்கள்..!

Q

 (SI)(தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நேரடி தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது.

 

தமிழ்நாடு காவல்துறை எஸ்.ஐ தேர்வு 2025 (TNUSRB SI Exam 2025)

பணியிடங்களின் விவரங்கள்

பதவியின் பெயர் பணி காலிப்பணியிடங்கள்

காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) - தாலுகா தமிழ்நாடு காவல் சார் நிலைப் பணி ஆண்-654, பெண் - 279 மொத்தம் - 933

காவல் சார்ப்பு ஆய்வாளர்கள் (SI)- ஆய்தப்படை தமிழ்நாடு காவல் சார் நிலைப் பணி ஆண் - 255, பெண் - 111 மொத்தம் - 366

மொத்தம் ஆண்கள் - 909, பெண்கள் - 309 என மொத்தம் - 1,299

 

வயது வரம்பு

காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு 20 வயது நிறை பெற்றிருக்க வேண்டும் மற்றும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வகுப்பு பிரிவுகளுக்கு தளர்வு உண்டு.

கல்வித்தகுதி

காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தற்போதுள்ள விதிகளின்படி, வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவீதம், பற்றாக்குறை காலிப்பணியிடங்களைத் தவிர அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதார்களுக்கான இடஒதுக்கீடு விவரங்களை அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை ஒதுக்கீடு - தாலுகா மற்றும் ஆயுத படையில் தலா 20 சதவீத காலிப்பணியிடங்கள்

சார்ந்துள்ள வாரிசுதாரருக்கான ஒதுக்கீடு - மீதமுள்ள 80 சதவீத காலிப்பணியிடங்களில் 10 சதவீதம் (9 +1)

விளையாட்டு ஒதுக்கீடு - மீதமுள்ள 80 சதவீத காலிப்பணியிடங்களில் 10 சததவீதம்.

சம்பள விவரம்

காவல் சார்ப்பு ஆய்வாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு பொது விண்ணப்பதார்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

துறை சார்ந்த விண்ணப்பதார்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு, சான்றிதழ் சாரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள்.

இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்காலிக பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்

எப்படி விண்ணப்பிப்பது?

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன்வ் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விரிவான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும். ஏப்ரல் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். இப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.

Trending News

Latest News

You May Like