தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியிட மாற்றம்..!
பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், '' தொடக்க கல்வித்துறை இயக்குனர் சேதுராம வர்மா ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். அரசு தேர்வு துறை இணை இயக்குனர் நரேஷ் பதவி உயர்வு அளிக்கப்பட்டு தொடக்கக் கல்வித் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனர் லதா அரசு தேர்வு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளார். அரசு உத்தரவினை தொடர்ந்து இயக்குனர்கள் புதிய பணியிடத்தில் பதவியேற்றனர்.