1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!

1

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தரவுகளின்படி 306 புலிகள் தற்போது உள்ளன. வன ஊழியர்கள் மற்றும் கடின நிலப்பரப்புகளில் வாழ்விடங்களை காக்கும் வேட்டை எதிர்ப்புக் குழுக்களின் தோள்களில் இந்த வெற்றி தாங்கி உள்ளது.

 

வனப்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நவீன உபகரணங்கள், தொழில்நுட்ப வசதிகள், கால்நடை மருத்துவர்களுடன், 1947 களப்பணியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் வன வாழ்விடங்கள், வன ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
 

குற்றங்களைத் தடுக்க, தமிழக வனத்துறை மற்றும் சிறப்புப் படையான வனவிலங்குகள் குற்றத்தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. புலிகளை காப்பதன் மூலம், நாம் நமது வனத்தின் ஆன்மாவையும் பாதுகாக்கிறோம்.
 

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


 

Trending News

Latest News

You May Like