1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது..!

1

இன்றைய கால கட்டத்தில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் உள்ளது. இருப்பினும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இது போன்ற உடல் உறுப்பு தானம் செய்வதால் நோயால் உடல் உறுப்பு செயல் இழந்தவர்களுக்கு பயன்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடலில் உள்ள உறுப்புகளை வீணாக்காமல் தானம் செய்வதால் பலரது உயிர் காக்கப்படும் என்றும் பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு 156 பேர் மற்றும் 2023ம் ஆண்டு 178 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்றும் நடப்பு ஆண்டில் இதுவரை 130 நாட்களில் 102 உடல் உறுப்பு தானம் நடைபெற்றது என்றும் கடந்த 6, 7 ஆண்டுகளில் இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like