தமிழகத்தில் தொடர் மழை : பள்ளிகளுக்கு விடுமுறை..? – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி ,கோயம்புத்தூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இத்தகைய சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த தொடர் மழையின் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மழை அதிகமுள்ள மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விடுமுறை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மழை பெய்து வரும் சூழலில் மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.