1. Home
  2. தமிழ்நாடு

காணொலி காட்சி மூலம் திருமணத்தை நடத்தி வைத்த மு.க. ஸ்டாலின்!

காணொலி காட்சி மூலம் திருமணத்தை நடத்தி வைத்த மு.க. ஸ்டாலின்!


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சந்திரன் இல்லத் திருமணத்தை முதன் முறையாக காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

பின்னர் திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், கொரோனா காலம் புதுமைகளுக்கு வழி வகை செய்துள்ளது. நெருக்கடியான சூழலில் ஆறுதல் அளிப்பது கட்சியினரின் இல்லத் திருமணங்கள் தான்.

கொரோனா காலத்தை கொண்டு கோடி கோடியாக கொள்ளையடிக்கும் ஆட்சி நடைபெற்று வருகிறது. உலகமே மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மட்டும் எப்படியெல்லாம் ஊழல் செய்யலாம் என யோசித்து வருகிறார்கள். இன்னும் 6 மாதம் தான் இந்த ஆட்சி இருக்கும். புதுக்கோட்டை மட்டுமல்ல செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

இருண்ட ஆட்சியை இருவர் தான் விரும்புவார்கள். ஒன்று எடப்பாடி அரசு இன்னொன்று மத்திய அரசு. தமிழகத்திற்கு புதிய வெளிச்சம் பிறக்க உள்ளது. 10 ஆண்டு சூழ்ந்துள்ள இருட்டில் இருந்து மீள மீண்டும் உதயசூரியன் வெளிச்சம் தெரிய உள்ளது.

நீட் தேர்வு மூலம் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான கார்ப்ரேட் நடத்தும் கோச்சிங் சென்டர்கள் பணம் சம்பாதிக்கவும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் அதை அபகரிக்கவும் வேளாண் திட்டங்கள் மூலம் அரசுக்கு உரியவர்களுக்கு நிலங்களை ஒப்படைக்க முடியும். இதன் மூலம் மாநில உரிமைகளை பறிக்க முடியும்.

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் திடமாகவும் தெளிவாகவும், உறுதியான தீர்ப்பை உதயசூரியனுக்கு வழங்க தயாராக உள்ளனர். திமுக காரன் என்பது தான் நமது சொத்து. அதனை யாராலும் அசைக்க முடியாது, ஆட்ட முடியாது, ஏன் இன்னும் செல்லப்போனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது என பேசினார்.

Trending News

Latest News

You May Like