#BREAKING : த.வெ.க கூட்டணியில் இணையும் தமிழ்நாடு முஸ்லிம் லீக்..!

தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. அண்மையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட பலருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டது.
இதனிடையே அடுத்தாண்டு தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளில் மாற்றமில்லை என்று அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வகையில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் தற்போதில் இருந்தே காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுவரை 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும், விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிவித்துள்ளார்
2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கூட்டணியில் இணையும் என அறிவிப்பு.
இதைத் தொடர்ந்து பேசிய அக்கட்சியின் தலைவர் முஸ்தபா, "தவெகவில் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. சிஏஏ சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனக்கூறி இஸ்லாமியர்களின் பக்கம் நிற்பவர் விஜய். எனவே, தவெகவுக்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது" என்றார்.