1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு செயற்கை நிதி நெருக்கடி தரும் மத்திய அரசு : அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு..!

1

தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24-ம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25-ம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

இந்தநிலையில் சென்னையில் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மத்திய அரசு கொடுத்த தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளேன். 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு செயற்கையான நிதி நெருக்கடி தரும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது. காத்திருந்து பாருங்கள் அமைச்சர் சார்பில் அறிக்கை வெளியாகும் என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அடிக்கடி செல்கிறார். ஒவ்வொரு முறையும் டெல்லி செல்லும் அண்ணாமலை தமிழகத்தின் 40 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த திட்டத்தில் நிதி பெற்றுத் தரலாமே. பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக கவர்னர், அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். தமிழக அரசும் 10 லட்சம் மாணவர்களின் அறிக்கையை வெளியிட முடியும். பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் உள்ளது. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

Trending News

Latest News

You May Like