தமிழ்நாடு திருமண உதவித் திட்டம் : ரூ.50,000 நிதியுதவி, 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் தமிழக அரசு..!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இருப்பினும், மாற்றுத்திறனாளி ஆண் மற்றும் பெண்கள் திருமணத்திற்கு முன்வருவது இல்லை. இந்த நிலையை போக்க வேண்டும் என்பதற்காகவே மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித் திட்டம் (Differently Abled Persons Marriage Assistance Scheme) என்ற உயரிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துக் கொள்ளும் சாதாரண நபருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்துடன் மணப்பெண்ணிற்குத் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி ஆண் மற்றும் பெண்கள் இடையே திருமணத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும், மாற்றுத்திறனாளி ஆண் மற்றும் பெண்களை திருமணம் செய்துக் கொள்கின்ற நல்ல நிலையில் உள்ள நபர்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த திட்டத்தில் பார்வையற்றவறை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள நபருக்கு திருமண நிதியுதவி, இயக்கத்திறன் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி மற்றும் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு திருமண நிதியுதவி என நான்கு விதமான நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தில் பார்வையற்றோரை திருமணம் புரிந்த பார்வையுள்ள நபரை ஊக்குவிக்கும் விதமாக ரூ.25,000 நிதியுதவியும், திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் தங்க நாணயமும் பாராட்டு சான்றிதழுடன் வழங்கப்படுகிறது. மேலும், தம்பதியரில் எவரேனும் ஒருவர் பட்டம் அல்லது பட்டயம் படித்தவராக இருந்தால் ரூ.50,000 நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் பாராட்டு சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.
தகுதிகள்: இந்த நிதியுதவியை பெற தம்பதியர்கள் இருவருக்கும் முதல் திருமணமாக இருக்க வேண்டும். தம்பதியர் இருவரும் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும், இருவரில் ஒருவர் பார்வை உள்ளவராகவும், மற்றொருவர் பார்வை அற்றவராகவும் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, திருமண அழைப்பிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை நகல், கல்வி சான்றுகள், பிறப்புச் சான்றிதழ், மற்றும் தம்பதியர் இருவருக்கும் இதற்கு முன்பாக திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இயக்கத்திறன் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி
இந்த திட்டத்தில் இயக்கத்திறன் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துக் கொள்ளும் சாதாரண நபருக்கு ரூ.25,000 நிதியுதவியும், திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் தங்க நாணயமும் பாராட்டு சான்றிதழுடன் வழங்கப்படுகிறது. மேலும், தம்பதியரில் எவரேனும் ஒருவர் பட்டம் அல்லது பட்டயம் படித்தவராக இருந்தால் ரூ.50,000 நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் பாராட்டு சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு: 1997 - 1998
தகுதிகள்: இந்த நிதியுதவியை பெற தம்பதியர்கள் இருவரில் ஒருவர் நல்ல உடல் நிலையில் உள்ளவராகவும், மற்றொருவர் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாகவும் இருக்க வேண்டும். அத்துடன், இது இருவருக்கும் முதல் திருமணமாக இருக்க வேண்டும். மேலும், தம்பதியர் இருவரும் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, திருமண அழைப்பிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை நகல், கல்வி சான்றுகள், பிறப்புச் சான்றிதழ், மற்றும் தம்பதியர் இருவருக்கும் இதற்கு முன்பாக திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி
இந்த திட்டத்தில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியை மணந்துக் கொள்ளும் சாதாரண நபருக்கு ரூ.25,000 நிதியுதவியும், திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் தங்க நாணயமும் பாராட்டு சான்றிதழுடன் வழங்கப்படுகிறது. மேலும், தம்பதியரில் எவரேனும் ஒருவர் பட்டம் அல்லது பட்டயம் படித்தவராக இருந்தால் ரூ.50,000 நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் பாராட்டு சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு: 1998 - 1999
தகுதிகள்: இந்த நிதியுதவியை பெற தம்பதியர்கள் இருவரில் ஒருவர் செவி மற்றும் பேச்சுத்திறனற்ற மாற்றுத்திறனாளியாகவும், மற்றொருவர் நல்ல உடல் நிலையில் உள்ளவராகவும் இருக்க வேண்டும். அத்துடன், இது இருவருக்கும் முதல் திருமணமாக இருக்க வேண்டும். மேலும், தம்பதியரின் வயதும் 18 க்கு மேல் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, திருமண அழைப்பிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை நகல், கல்வி சான்றுகள், பிறப்புச் சான்றிதழ், மற்றும் தம்பதியர் இருவருக்கும் இதற்கு முன்பாக திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு திருமண நிதியுதவி
இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துக் கொள்ளும் மாற்றுத்திறனாளியை ஊக்குவிக்கும் விதமாக ரூ.25,000 நிதியுதவியும், திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் தங்க நாணயமும் பாராட்டு சான்றிதழுடன் வழங்கப்படுகிறது. மேலும், தம்பதியரில் எவரேனும் ஒருவர் பட்டம் அல்லது பட்டயம் படித்தவராக இருந்தால் ரூ.50,000 நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் பாராட்டு சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு: 2009 - 2010
தகுதிகள்: இந்த நிதியுதவியை பெற தம்பதியர் இருவரும் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும், தம்பதியர்கள் இருவருக்கும் முதல் திருமணமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தம்பதியர் இருவரும் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, திருமண அழைப்பிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை நகல், கல்வி சான்றுகள், பிறப்புச் சான்றிதழ், மற்றும் தம்பதியர் இருவருக்கும் இதற்கு முன்பாக திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித்தொகைக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
இந்த அனைத்துவிதமான திட்டங்களில் இருந்தும் உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து ஒராண்டுக்குள் விண்ணப்பித்து இருக்க வேண்டும். அதன்பிறகு, விண்ணப்பித்தால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் படாது.
மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை
இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெற விரும்புவோர் மேற்கூறிய அனைத்து ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது அருகில் உள்ள பொது சேவை மையம் மூலமாகவோ எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
இது தவிர, ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பித்துக் கொள்ள முடியும். அதற்கு, முதலில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ TN eSevai போர்ட்டலை பார்வையிடவும். இப்போது, Citizen Login என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஏற்கனவே அக்கவுண்ட் இருந்தால் User name, Password கொடுத்து Login செய்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் புதிய பயனராக இருக்கும்பட்சத்தில், New User? Sign Up Here என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். ஒரு புதிய பேஜில் உங்களைப் பற்றி விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்பட்டிருக்கும். அதில், முழுப் பெயர், தாலுக்கா, மாவட்டம், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் ஆகியவற்றை கொடுத்து, பாஸ்வோர்டு செட் செய்துக் கொள்ளவும். தொடர்ந்து Login பேஜில் பயனர் பெயர், பாஸ்வோர்டு மற்றும் கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை உள்ளிட்டு Login என்ற பொத்தானைக் கிளிக் செய்து உள்நுழையவும்.
இப்போது பேஜின் இடது பக்கத்தில் Services என்ற விருப்பத்தை கிளிக் செய்து, Directorate for Welfare of differently abled என்ற லிங்கை கிளிக் செய்யவும். அங்கு, ஒரு பட்டியல் தோன்றும் அதில் DA-400 Application for Marriage Assistance Scheme for Disabled Persons என்பதை தேர்ந்தெடுத்தவுடன், Tamil Nadu e-District என்ற வெப் போர்ட்டலுக்கு Redirect ஆகும். அதில், அப்ளை செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை கவனமாகப் படித்து, அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். படித்த பின் Proceed கொடுத்து உள்ளே செல்லவும். அடுத்ததாக உங்களிடம் CAN நம்பர் இருந்தால் அதை உள்ளிடவும், ஒருவேளை இல்லையென்றால், CAN Registration க்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு Register Can என்பதை கிளிக் செய்தால், ஒரு CAN விண்ணப்பப் படிவம் திரையில் தோன்றும். அதை பிழையில்லாமல் பூர்த்தி செய்து Register என்பதை கிளிக் செய்து சமர்ப்பிக்கவும். இப்போது உங்களுக்கான CAN நம்பர் திரையில் காண்பிக்கப்படும்.
அதை உள்ளிட்ட பிறகு, திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் திரையில் தோன்றும். அதில், விண்ணப்பதாரர் பெயர், தாயின் பெயர், திருமண நிலை, பாலினம், பிறந்த தேதி, ஜாதி, மதம், முகவரி, மற்ற அனைத்து விவரங்களை பிழையில்லாமல் பூர்த்தி செய்து, அதன் பின் submit கொடுக்கவும். அடுத்தபடியாக, தேவையான ஆவணங்களை ஒவ்வொன்றாக அப்லோடு செய்து, Make Payment பொத்தானை கிளிக் செய்து பணம் செலுத்த வேண்டும்.
இப்போது Payment செய்வதற்கு நெட் பேங்கிங், டெபிட் கார்டு, யுபியை போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ரூ.60 பணத்தை செலுத்தவும். பிறகு, Print Receipt என்பதை கிளிக் செய்து ஒப்புகை சீட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் உங்களுடைய விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்களுடைய விண்ணப்பத்தை சரிபார்ப்பார்கள்.
அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் 10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும் நீங்கள் கொடுத்திருக்கும் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.