வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு சிங்கப்பெண்கள்!
பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங்கை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், இறுதி போட்டியில் மோதினார்.
இறுதிப் போட்டியில் 21-17,21-10 என்ற பள்ளியில் தோல்வியை தழுவினார். இறுதிப் போட்டியில் துளசிமதி தோல்வியை தழுவினாலும், இரண்டாம் இடம் பிடித்த அவருக்கு தற்பொழுது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்தே மனிஷா ராமதாஸ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்தியா இதுவரை 10 பதக்கங்களை பெற்றுள்ளது.