இந்தியாவின் சிறப்பான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்! உற்சாகத்தில் எடப்பாடி அரசு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை , நிர்வாக செயல்திறன், சூழல் குறியீட்டு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலணை செய்யப்பட்டன. இதனையடுத்து நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் கேரளம் முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு மாநிலங்களைத் தொடர்ந்து ஆந்திரா 3வது இடத்தையும், கர்நாடகா 4வது இடத்தையும் பிடித்துள்ளன.
சிறிய மாநிலங்களின் பிரிவில் கோவா, மேகாலயம், இமாச்சலப் பிரதேசம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா, பீகார் ஆகிய மாநிலங்கள் பட்டியலின் இறுதி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்திருப்பது, அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், எடப்பாடி ஆதரவாளர்களும் பிரச்சாரத்திற்காக இதைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.