8 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் 8 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மத்திய சென்னை அசோக் நகர் சார்பதிவாளர் வெண்மதி, பழனி நிர்வாக சார்பதிவாளராகவும், திருச்சி காட்டுப்புத்தூர் சார்பதிவாளர் வசந்தாமணி நாமக்கல் வழிகாட்டி சார்பதிவாளராகவும், விருத்தாச்சலம் மாவட்ட பதிவாளர் அலுவலக நிர்வாக சார்பதிவாளர் ஏ.கே.ஜார்ஜ் பொன்னேரி தற்காலிக இணை சார்பதிவாளராகவும், செங்கல்பட்டு 2 எண் இணை சார்பதிவாளர் சத்தியபிரியா திண்டிவனம் வழிகாட்டி சார்பதிவாளராகவும், சிதம்பரம் 1 எண் இணை சார்பதிவாளர் ரங்கராஜ் திருவள்ளூர் சீட்டு மற்றும் சங்க சார்பதிவாளராகவும், மன்னார்குடி சார்பதிவாளர் மஞ்ச கடலூர் அசல் பத்திரப்பிரிவு கண்காணிப்பாளராகவும், கெங்கவல்லி சார்பதிவாளர் அம்பிகா திண்டுக்கல் அசல் பத்திரப்பிரிவு கண்காணிப்பாளராகவும், வேப்பந்தட்டை சார்பதிவாளர் விஜயன் 1 எண் இணைசார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.