1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு அதிரடி : 11 பேர் பணியிட மாற்றம்...4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

1

தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு உட்பிரிவு காவல் உதவி கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த ஐ.ஷானாஜ், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை சைபர் குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இவரை போன்று, காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீபெரும்புதூர் காவல் உதவி கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்த ஆர். உதயகுமார் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் ஏற்கெனவே காலியாக உள்ள கோவை தெற்கு மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் காவல் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.யூ.சிவராமன், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர், எஸ்.பிருந்தா ஐபிஎஸ் இதுவரை வகித்து வந்த சேலம் வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையராக பணியாற்றுவார்.

திண்டுக்கல் நகர காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்து வந்த ஐபிஎஸ் அதிகாரியான பி.சிபினுக்கும் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கெனவே காலியாக உள்ள திருச்சி வடக்கு மாநகர காவல் துணை ஆணையராக பணியாற்றுவார் என்று உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்றுள்ள நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர்த்து, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 11 காவல் துறை உயரதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஏடிஜிபி நிலையிலான ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ் மணீஷ் திவாரி, ஹெச்.எம்.ஜெயராமுக்கு பதிலாக, மாநில குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில குற்ற ஆவணக் காப்பத்தின் ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த ஹெச்.எம்.ஜெயராம், ஏற்கெனவே காலியாக உள்ள சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவு ஏபிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் எஸ்.பிருந்தா ஐபிஎஸ், தீபா சத்யன் ஐபிஎஸ், ஜி. சுப்புலெஷ்மி ஐபிஎஸ் உள்ளிட்ட காலல் துறையின் ஒன்பது உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like