1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.25 ஆயிரம்... விண்ணப்பிப்பது எப்படி?

1

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மையத்துடன் (AICSCC) இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை உரையில் அறிவிக்கப்பட்டது.   

 

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் (UPSC) பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் (Preliminary Examination) தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

 

முதல்நிலைத் தேர்வில் (Main Examination) தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரத்து ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  

இதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டின் UPSC முதல்நிலை தேர்வில் (மே 25) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 25 ஆயிரம் ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.  

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் UPSC முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையை படிக்கவும்.   

இந்த இணையதளத்தில் ஜூன் 21 முதல் ஜூலை 2ஆம் தேதிவரை (புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like