தங்கம் கொள்முதல் செய்கிறது தமிழ்நாடு அரசு..!
தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமண உதவித்திட்டம், மணியம்மை ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற மகளிர் திருமண உதவித்திட்டம், முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு 8 கிராம் எடையுள்ள 8000 நாணயங்களை கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தகவல் அளித்துள்ளது.
திருமண உதவித்திட்டங்களுக்காக தமிழ்நாடு அரசு ரூ.48.13 கோடி மதிப்பில் 16 கிலோ தங்கம் கொள்முதல் செய்ய உள்ளது.