தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் : கூட்டுறவு வங்கிகளில் வேலை காத்திருக்கு..!

2024-2025 ஆம் ஆண்டு 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி படிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
- சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025 ஆம் ஆண்டு 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (Diploma in Cooperative Management) தொடங்கப்படவுள்ளது.
- கூட்டுறவு நிறுவனங்களில் / சங்கங்களில் முறையான பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் மட்டுமே பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
- வயது 01.05.2025 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
- கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .
- விண்ணப்பங்கள் Online மூலம் www.tncu.gov.tn.in என்ற இணையதள முகவரியில் 16.04.2025 முதல் 06.05.2025 அன்று மாலை 5.30 வரை விண்ணப்பிக்க வேண்டும்.
- இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் (Upload) செய்யவேண்டும்.
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.05.2025 பிற்பகல் 5.30 மணி வரை மட்டும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்திருந்தால் அவ்விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-, பயிற்சிக்கான பயிற்சிக் கட்டணம் ரூ. 20750/-
- பயிற்சி காலம் : ஒராண்டு 2 பருவமுறைகள். புதிய பாடத்திட்டத்தின் படி தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
- தேர்வுகள் தமிழில் மட்டுமே கொள்குறி வினா அடிப்படையில் (Objective Type) நடத்தப்படும்.
- பயிற்சி தொடங்கும் நாள் : 09.05.2025
- பயிற்சி வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
- விண்ணப்பம் மற்றும் பயிற்சி கட்டணம் ஆகியவை இணையதளம் (Online) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
- தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 044-25360041 / கைப்பேசி எண்: 9444470013