1. Home
  2. தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு..!

1

> சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அம்ரித் நில நிர்வாக இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராக ஹனிஷ் சாப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

> ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையராக நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஊரக மேம்பாட்டுத் திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like