மலைக்கிராமங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு..!
வயநாடு பேரிடர் எதிரொலியாகத் தமிழகத்தில் மலைக் கிராம மாவட்டங்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.