பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, பருவகால தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின் பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்துக் கொள்ளும் வகையில் அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைத்துக் கொள்ளவும், தேவைப்படும் போது அனுமதிக்கப்பட்ட மின் பளுவிற்கு உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதனை ஆண்டுக்கு 4 முறை பயன்படுத்திக் கொள்ளலாம். சூரிய ஒளி சக்தி, மேற்கூரை, மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.