1. Home
  2. தமிழ்நாடு

தி.நகர் விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 புதிய மண்டலங்கள் உருவாக்கம் - தமிழக அரசு..!

1

சென்னையில் புதிதாக உருவாகி உள்ள மண்டலங்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாகம்- திருவல்லிக்கேணி, தி.நகர், விருகம்பாக்கம், பெருங்குடி-சோழிங்கநல்லூர் ஆகிய 6 புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட மண்டலங்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது. அதுதொடர்பான அரசாணையில்," கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தி.நகர், விருகம்பாக்கம், பெருங்குடி - சோழிங்கநல்லூர் மண்டலங்கள் புதிதாக உருவாக்கம்.

ஏற்கெனவே உள்ள 15 மண்டலங்களில் மணலி மண்டலம் திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பிருந்த 14 மண்டலங்கள், 6 புதிய மண்டலங்கள் என மொத்த எண்ணிக்கை 20ஆக உயர்வு பெற்று உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 20ஆக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

Trending News

Latest News

You May Like