இனி 8-ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்... +1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு அதிரடி..!
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு, மாநிலத்திற்கென ஒரு தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க 2022 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழு, துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்து, 650 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை தயாரித்தது. அந்த அறிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்வி கொள்கையின் முதற்கட்ட அம்சங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முக்கிய விவரங்கள்
- 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், இந்த ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
- 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு: இனிவரும் காலங்களில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.
- 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி: மாணவர்கள் மத்தியில் கற்றல் சுமையைக் குறைக்கும் வகையில், 8 ஆம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி (No-Detention Policy) முறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
.png)