1. Home
  2. தமிழ்நாடு

சிறப்பு பேருந்துகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

1

மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 2,970 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு ஏப்ரல் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 6,009 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதில் பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 2,295 பேருந்துகள் இயக்கப்படுகிறது. லோக்சபா தேர்தலையொட்டி மொத்மாக 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், காரைக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, சேலம் திருப்பூர் என பல்வேறு ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


 

Trending News

Latest News

You May Like