1. Home
  2. தமிழ்நாடு

ரூ.50,000 தரும் தமிழக அரசு! உதவி தொகை பெறுவது எப்படி?

1

மாணவிகள் மற்றும் பெண்கள் தவிர புதிதாக திருமணம் ஆகும் பெண்களுக்கான திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணங்களுக்கு, திருமண உதவித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் திருமண செலவுக்கான பணமும், தங்கமும் வழங்கப்படுகிறது. 

கணவரை இழந்த விதவை தாய்மார்களுக்கு அவர்களின் மகள் திருமணத்திற்கு ஈவேரா மணியம்மையார் நினைவு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூபாய் 25,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. மேலும் அன்னை தெரசா நினைவு திட்டத்தின் மூலம் ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூபாய் 25,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. 

விதவைகளின் மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கல்வித் தகுதி இல்லாத பெண்களுக்கு ரூபாய் 25,000 பணமும், 4 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. அதுவே பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூபாய்  50,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையை பெற குடும்ப வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டங்களில் பயன்பெற முடியும். இந்த திட்டங்களில் உதவித்தொகை பெற திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது உங்களின் திருமண அழைப்பிதழ், மணமகன் மற்றும் மணமகளின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ்,  கல்வி சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like