1. Home
  2. தமிழ்நாடு

புதிய மார்க்கெட் கட்டிடத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி பெயர் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

Q

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மா.பொ.சி சாலையில் காமராஜர் காய்கறி மார்க்கெட் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் பழுதடைந்த காரணத்தால் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்ள இந்த மார்க்கெட்டை புனரமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில், பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக நவீன முறையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு பணிகள் தற்போது முடிவடைந்தன.

திறப்பு விழாவை எதிர்நோக்கி இருக்கும் இந்த மார்க்கெட்டிற்கு மீண்டும் பழைய பெயரான பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட் என்று தான் பெயர் சூட்டப்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இந்நிலையில் திருத்தணியில் 3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டிடத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி என பெயர் சூட்டப்படும்.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

Trending News

Latest News

You May Like