தமிழக அரசு 2026 பொது விடுமுறை தினங்கள் அறிவிப்பு..!
2026 ஆம் ஆண்டில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அரசுத் துறைகள், அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். மேலும், சில விடுமுறைகள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கே தனிப்பட்டவையாக பொருந்தும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல்:
- புத்தாண்டு தினம் – ஜனவரி 1 (வியாழன்)
- பொங்கல் – ஜனவரி 15 (வியாழன்)
- திருவள்ளுவர் தினம் – ஜனவரி 16 (வெள்ளி)
- உழவர் திருநாள் – ஜனவரி 17 (சனி)
- குடியரசு தினம் – ஜனவரி 26 (திங்கள்)
- தைப்பூசம் – பிப்ரவரி 1 (ஞாயிறு)
- தெலுங்கு புத்தாண்டு தினம் – மார்ச் 19 (வியாழன்)
- ரம்ஜான் (ஈதுல் பித்ர்) – மார்ச் 21 (சனி)
- மகாவீர் ஜெயந்தி – மார்ச் 31 (செவ்வாய்)
- வணிக வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிவு நாள் – ஏப்ரல் 1 (புதன்) (வங்கிகளுக்கு மட்டும்)
- புனித வெள்ளி – ஏப்ரல் 3 (வெள்ளி)
- தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் – ஏப்ரல் 14 (செவ்வாய்)
- மே தினம் – மே 1 (வெள்ளி)
- பக்ரீத்– மே 28 (வியாழன்)
- முகரம் (யோம்-இ-ஷஹாதத்) – ஜூன் 26 (வெள்ளி)
- சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15 (சனி)
- மிலாதுன் நபி (நபி பிறந்த நாள்) – ஆகஸ்ட் 26 (புதன்)
- கிருஷ்ண ஜெயந்தி – செப்டம்பர் 4 (வெள்ளி)
- விநாயகர் சதுர்த்தி – செப்டம்பர் 14 (திங்கள்)
- காந்தி ஜெயந்தி – அக்டோபர் 2 (வெள்ளி)
- ஆயுத பூஜை – அக்டோபர் 19 (திங்கள்)
- விஜயதசமி – அக்டோபர் 20 (செவ்வாய்)
- தீபாவளி – நவம்பர் 8 (ஞாயிறு)
- கிறிஸ்துமஸ் – டிசம்பர் 25 (வெள்ளி)
இந்த விடுமுறைகள் தவிர, ஞாயிற்றுக்கிழமைகள் வழக்கம்போல பொது விடுமுறையாகவே இருக்கும். இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 2026 ஆண்டு மொத்தம் 52 ஞாயிறு + 24 அரசு விடுமுறை, என 76 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைகின்றன.