முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் குறித்து தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம்..!

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கிறது. கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு தொடர்பான ஆவணங்களை மாநில அரசு தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்குத் தொடர அனுமதிக்கோரி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.