நாளை தமிழக ஆளுநர் ஆய்வு..!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை நாளை பகல் 12.30 மணிக்கு ஆய்வு மேற்கொள்கிறார். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆய்வு மேற்கொள்கிறார். பல்கலை. வளாகத்தில் சிசிடிவி இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு, பல்கலைக்கழக செயல்பாடுகள் தொடர்பாக ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறார்.