1. Home
  2. தமிழ்நாடு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்டால் சர்ச்சை..!

1

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “#திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தப் புனித நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவரை சனாதன பாரம்பரியத்தின் துறவி என்று அவர் குறிப்பிட்டுள்ளதும், காவி உடையில் திருவள்ளுவரை சித்தரித்திருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காவி உடையில் திருவள்ளுவரை சித்தரித்திருப்பது கடும் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like