1. Home
  2. தமிழ்நாடு

இன்று தமிழக மக்கள் வீடுகளில் தீபம் ஏற்ற கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்..!

1

தமிழக கவர்னர் மாளிகையின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;- "தற்போது நாட்டு மக்கள் ராம பக்தியில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியிலும் இதை நான் பார்க்கிறேன், உணர்கிறேன். ஸ்ரீ ராமர் பாரதத்தின் தேசிய சின்னம். இன்று ஜனவரி 22-ந்தேதி அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவின் மூலம் தேசத்திற்கு ஒரு அற்புதமான ராமர் கோவில் கிடைக்கப் பெறும்.

இந்த வரலாற்று தினத்தை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். இந்த நாளை தமிழகத்தின் அனைத்து சகோதர, சகோதரிகளும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன் தீபம் ஏற்றி கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்."


 

Trending News

Latest News

You May Like