1. Home
  2. தமிழ்நாடு

31 கைதிகள் விடுதலைக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..!

1

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட கோரியும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோப்புகளில் கையெழுத்திட கோரியும் தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று வருகிறது. நேற்று விசாரணையின் போது கவர்னர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீண்ட நாள் சிறையில் உள்ள 31 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டநாள் சிறையில் உள்ள 31 கைதிகளை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு கவர்னர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார். கைதிகளை முன்விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 கோப்புகளில், 31 கோப்புகளுக்கு தமிழ்நாடு கவர்னர் அனுமதி அளித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கு பணிந்து 31 கைதிகள் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். மேலும் 39 கைதிகளின் முன்விடுதலை வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட கவர்னர் ஆர்என் ரவி மறுப்பு கூறியுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

Trending News

Latest News

You May Like