1. Home
  2. தமிழ்நாடு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு துவங்கியது..!

1

தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய அரசு மற்றும் தனியாா் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாடு இன்று காலை உதகை ராஜ்பவனில் துவங்கியது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 40க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் முன்னிலையில் துவக்கிவைத்தார்.

இன்று மற்றும் நாளை துணைவேந்தா்கள் மாநாடு நடைபெறும்.இந்த கூட்டத்தில் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினா்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல் போன்ற பல விஷயங்களில் விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

மாநாட்டின் தொடக்க அமா்வில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவா் பேராசிரியா் எம்.ஜெகதீஷ்குமாா் சிறப்புரையாற்றுகிறாா்.மேலும், நெட் அல்லது யுஜிசி-சிஐஎஸ்ஆா் தோ்வுகளில் தகுதிபெற்ற மற்றும் ஜூனியா் ரிசா்ச் ஃபெல்லோஷிப் பெற்ற மாணவா்கள், அறிஞா்களின் அனுபவப் பகிா்வும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.வைத்தியசுப்ரமணியம், கரக்பூா் ஐஐடி முன்னாள் இயக்குநா் பாா்த்தா சக்ரபா்தி, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவன துணைவேந்தா் பாரதி ஹரிசங்கா் உள்ளிட்ட கல்வியாளா்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனா்.

Trending News

Latest News

You May Like