1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசின் சூப்பர் திட்டம்..! ஏழை குடும்பங்களுக்கும் 3 சென்ட் இலவச நிலம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

1

தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம், இதுவரை 4.37 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு அவர்களின் குடியிருப்புக்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளில் உள்ள Belt Areaக்களில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது, இது நகர்ப்புற ஏழை மக்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சி செய்தியாக அமைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்கள் சில முக்கிய தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக எந்த வித ஆட்சேபணையும் இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சில இடங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நிலத்தின் அளவு எவ்வளவு?

தகுதியுடைய பயனாளிகளுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியை பொறுத்து நிலத்தின் அளவு மாறுபடும். உதாரணமாக அதிகபட்சமாக 3 சென்ட் வரை நிலம் வழங்கப்படும். கிராமப்புறங்களில் பொதுவாக 2 முதல் 2.5 சென்ட் வரை நிலம் வழங்கப்படுகிறது. மேலும் நகர்ப்புறங்களில் 1.25 முதல் 1.5 சென்ட் வரை நிலம் வழங்கப்படுகிறது. இந்த நிலம், அரசு புறம்போக்கு அல்லது நத்தம் நிலங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

யார் யாருக்கு பட்டா வழங்கப்படாது?

அனைத்து அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்படாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். பின்வரும் ஆட்சேபகரமான இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது. அதன்படி, நீர்நிலைகள் உதாரணமாக ஏரி, குளம், ஆறு போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கும், கோயில் நிலத்தில் வசிப்பவர்களுக்கும், நீர்ப்பாசன கால்வாய் பகுதியில் வசிப்பவர்களுக்கு நிலம் வழங்கப்பட மாட்டாது. இருப்பினும், இதுபோன்ற இடங்களில் வசிப்பவர்களை அரசு முழுவதுமாக கைவிடுவதில்லை. அவர்களுக்கு, பாதுகாப்பான மாற்று இடங்களில், மாற்று குடியிருப்புகள் அமைத்து கொடுக்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like