1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..! ரேஷனில் இந்த மாதம் பருப்பு, பாமாயில் வாங்கவில்லையா?

1

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

தேர்தல் நடைமுறையின் காரணமாக மே 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஜூன் மாதத்தில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனினும், பற்றாக்குறை காரணமாக பலர் பாமாயில், துவரம் பருப்பை பெற முடியவில்லை.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த மே, ஜூன் மாதங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு 2 கோடி பாமாயில் பாக்கெட்கள், தேவையான துவரம்பருப்பு ஆர்டர் செய்யப்பட்டு, அனைத்தும் நியாயவிலை கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வரும் ஜூலை மாத முதல் வாரத்துக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்பட்டுவிடும் என அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.

இந்நிலையில் பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 ஆம் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like