1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம்..! இவர்கள் ரூ.50 ஆயிரம் + தங்கம் பெறலாம்..!

1

கலப்பு திருமணம் செய்தவர்களை குடும்பத்தினர், உறவினர்கள், ஊர்க்காரர்கள் பலரும் ஒதுக்குவதால் பலரும் தங்களின் மனதுக்கு பிடித்தவர்களுடன் திருமணம் செய்ய அஞ்ச வேண்டிய சூழல் நிலவுகிறது. பாகுபாடுகளற்ற சமூகத்தை கட்டுமைக்க கலப்பு திருமணங்களை ஊக்குவிப்பதும் ஒரு வழிமுறை எனலாம்.   

அந்த வகையில், கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிறப்பு நிதி உதவித் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டம் என்ன, அதில் கிடைக்கும் நன்மைகள் என்ன உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கு காணலாம்.   

தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கலப்பு திருமணம் செய்வோருக்கு 8 கிராம் (22 கேரட்) தங்க நாணயமும், நிதி உதவியும் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கலப்பு திருமணம் செய்வோருக்கு 8 கிராம் (22 கேரட்) தங்க நாணயமும், நிதி உதவியும் வழங்கப்படுகிறது.   

மேலும், கலப்பு திருமணம் செய்தவர்களில் பட்டம்/பட்டயப்படிப்பு முடித்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதில் ரூ.30 ஆயிரம் மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும் மற்றும் ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரம் மூலமாகவும் நிதி உதவியாக வழங்கப்படும்.  கலப்பு திருமணங்களை இரண்டு வகைமைகளாக தமிழ்நாடு அரசு அதன் இணையத்தளத்தில் வகைப்படுத்தி உள்ளது. முதல் வகை, கலப்பு திருமண தம்பதிகளின் துணைவர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும், அதே சமயம் மற்ற ஒருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இரண்டாவது வகை, வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் முன்னேறிய அல்லது பொதுப்பிரிவை சேர்ந்தவர்களாகவும், மற்ற ஒருவர் பிற்பட்ட/மிகவும் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டத்தில் விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும்.

Trending News

Latest News

You May Like