1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசின் செம திட்டம்..மாதம் ரூ.1500 ஓய்வூதியம்.. வங்கிகளுக்கே வரும்..!

1

திட்டத்தின் பெயர்:
ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம். 

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுக்க 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். மாதம் ரூ.1,500 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் - மாவட்ட சமூக நல அலுவலர்.

நிதி உதவி:
ஒவ்வொரு மாதமும் ரூ. 1,500 ஓய்வூதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:
திருநங்கைகள் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்திட “திருநங்கைகள்” என்னும் தனிப்பட்ட கைப்பேசி செயலி மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். 

தேவைப்படும் ஆவணங்கள்:
திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை. 

தொடர்புக்கு:
திட்டத்தில் இணைந்து மாதம் தோறும் உதவித் தொகை பெற விரும்பும் பயனாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் பயன்பெற விருப்புபவர்கள் உடனடியாக தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like