தமிழ்நாடு அரசின் புதிய சாதனை..! அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் புதிய மைல்கல்..!

கே.ஜி வகுப்பு முதல் 2ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தொடர்ந்து, பள்ளிகள் கடந்த ஜூன் 2ஆம் தேதியே திறக்கப்பட்டது.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, கே.ஜி வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில் சேர்த்து 3.12 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளார்.
கே.ஜி. வகுப்பில் தமிழ்நாடு முழுவதும் 22 ஆயிரத்து 757 பேர் சேர்ந்துள்ளனர். மேலும், 2ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 65 ஆயிரத்து 391 பேர் சேர்ந்துள்ளனர் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ் வழி முதல் வகுப்பில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 676 பேரும், ஆங்கில வழி முதல் வகுப்பில் 52 ஆயிரத்து 57 பேரும் புதிதாக சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்கள் முறையே முதல் 5 இடங்களை பிடிக்கின்றன எனலாம். முதலிடம் பிடித்த சென்னையை பொறுத்தவரை அரசுப் பள்ளியில் 17 ஆயிரத்து 985 பேர் சேர்ந்துள்ளனர். 2வது இடத்தை பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 9 ஆயிரத்து 528 பேர் சேர்ந்துள்ளனர். முதலிடம் பிடித்த சென்னையை பொறுத்தவரை அரசுப் பள்ளியில் 17 ஆயிரத்து 985 பேர் சேர்ந்துள்ளனர். 2வது இடத்தை பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 9 ஆயிரத்து 528 பேர் சேர்ந்துள்ளனர்.