1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு அரசே விழித்துக்கொள்- அன்புமணி இராமதாஸ்..!

1

 உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியின் மகன் ஜெயராமன் (27). இவர் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். ஜெயராமன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோகம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியில் கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் பணத்தை இழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜெயராமன், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நேற்று நள்ளிரவு திருச்சியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுக் குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் காவல் துறையினர், விருதாச்சலம் ரயில்வே காவல்துறை உதவியுடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஐந்தாவது உயிர் ஜெயராமன் ஆவார். ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like