கோவில்களை மூட தமிழக அரசு உத்தரவு!

கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்களில், அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில், தேவாலயம், மசூதிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப்பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. 10,11,12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சிகள், புத்தக் காட்சிகள் ஒத்திவைப்பு.
பொது பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்களில் 50% பயணிகள் செல்ல அனுமதி.
அனைத்து பொங்கல் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.
கடற்கரைகளில் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் புத்தாண்டின் போது ஏராளமான மக்கள் வழிபாட்டு தலங்களில் குவிந்ததால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
newstm.in