1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பின் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

1

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த வருடமும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன் அறிவித்தது .

அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு மற்றும் இவற்றுடன் ருபாய் 1000 ரொக்க பணம் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது .அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மக்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்ய மாவட்டம் மற்றும் வட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு.

முழு நீளக் கரும்பை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவு.

கரும்பு கொள்முதல் குழு: மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண் துறை இணை இயக்குநர், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரை அடங்கிய குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் உதவி ஆணையர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேரடி கொள்முதல்: வட்டார அளவில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உதவி ஆணையர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு அமைத்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கரும்பை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

கண்காணிக்க குழு: இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களைப் பெறக் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தினை கண்காணிக்கத் தொடர்பு அலுவலர்களை நியமித்து பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

புகார் தர எண்கள்: பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும்.1967, 1800 425 5901 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தினசரி கண்காணிக்க தொடர்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படாது.

Trending News

Latest News

You May Like