1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு அதிரடி! இனி இவர்களுக்கும் மாதம் ரூ. 1000..!

1

அரசுப்பள்ளிகளில் படித்து அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு இந்த 1000 ரூபாய் உதவித்தொகை மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதாவது அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் மாணவிகளுக்கும் உயர் கல்வி பயில புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் 1000 ரூபாய் பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.

அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் வரும் 30 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. வரும் 30ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. புதுமைப்பெண் திட்டம் விரிவுப்படுத்தப்படும் நிலையில், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்க்கல்வி பெறும் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like