ரம்ஜான் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு !!

ரம்ஜான் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு !!

ரம்ஜான் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு !!
X

கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க , அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை செயலாளர் திரு.க.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் ;

ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி அந்தந்த பள்ளி வாசல்களுக்கே 19ம் தேதிக்குள் வழங்கப்படும். தன்னார்வலர்களின் உதவியுடன் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு பள்ளிவாசல்களே சிறு சிறு பைகளில் அரிசியை பிரித்து அளிக்கும்.

நோன்பு கஞ்சி காய்ச்சிக் கொள்வதற்காக டோக்கன் மூலம் வீடுகளுக்கு அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்படும். தொழுகை மற்றும் நோன்பு கஞ்சி செய்வதை அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

Newstm.in

Next Story
Share it