கூண்டோடு மாற்றியது தமிழக அரசு..!!

தமிழ்நாட்டில் மேலும் 55 சார் பதிவாளர்களை இடமாற்றம் செய்து அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆணையிட்டுள்ளார். நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில் சார் பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 36 மாவட்ட பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 55 சார் பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்சென்னை நீலாங்கரை சார் பதிவாளராக சண்முகம், குன்றத்தூர் சார் பதிவாளராக வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய சென்னை அசோக் நகர் சார்பதிவாளராக வெண்மதி, தாம்பரம் சார் பதிவாளராக சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலந்தூர் சார் பதிவாளராக கற்பகவள்ளி, கொன்னூர் சார் பதிவாளராக மோகன சுருதி, திருவொற்றியூர் சார் பதிவாளராக திருமாறன், பல்லாவரம் சார்பதிவாளராக அறிவழகன், வேளச்சேரி சார்பதிவாளராக முகமது ரஃபி, பூவிருந்தவல்லி சார்பதிவாளராக வாணி, செங்குன்றம் சார்பதிவாளராக புண்ணியமூர்த்தி, காஞ்சிபுரம் எண்-4 இணை சார்பதிவாளராக நெடுஞ்செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.