இந்த 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/f8909906b50dd8b1a63666cd827ec8c8.jpg?width=836&height=470&resizemode=4)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது “மிக்ஜாம்” புயலாக வலுவடைந்து உள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 290 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர பிரதேச மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோர பகுதியினை நாளை (டிச.4) முற்பகல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதன் பிறகு வடக்கு திசையில் நகர்ந்து டிச.5 அன்று முற்பகல் தெற்கு ஆந்திர பிரதேசத்தின் கடற்கரையை நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே மணிக்கு 80 முதல் 100 கி.மீ. பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்ககப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு .சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு.
மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள், ஐ.டி, நிதி நிறுவனங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு
பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது!
#BREAKING | மிக்ஜாம் புயல் எச்சரிக்கை!
— Sun News (@sunnewstamil) December 3, 2023
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு #SunNews | #CycloneMichaung pic.twitter.com/Aa2y0ZhClc