தமிழக அரசு பஸ் கோர விபத்து.. 10 பேர் படுகாயம்..!

ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று பேர்ணாம்பட்டிற்கு திங்கள்கிழமை காலை 5. 45 மணியளவில் புறப்பட்டது. பேரணாம்பட்டு சாலையில் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ராஜா இயக்கினார்.
பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் அருகில் உள்ள தோல் தொழிற்சாலை, ஷூ தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் தனியார் கம்பெனி அருகே சென்றபோது எதிர்த்திசையில் பேர்ணாம்பட்டிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்த லாரி அதிவேகமாக பேருந்தின் மீது மோதியது .
இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. பேருந்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த உமரபாத் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.