3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!
போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 8 கோட்டங்களுக்கு 2015ம் ஆண்டுக்கு பிறகு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு புதிய நியமனம் செய்யப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மேலும் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கும் பணிகளும் நடந்து வருகின்றன.இந்நிலையில் 3 ஆயிரத்து 274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் 3 ஆயிரத்து 274 ஓட்டுநருடன் நடத்துநர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
21ம் தேதி முதல் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.