1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு அறிவித்த புதிய திட்டம் !! இனி நீங்களும் ஆகலாம் யூடுபர்..!

1

இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தனி யூடியூப் சேனலை உருவாக்கி அதனை திறமையாக நடத்தி வருகின்றனர். அந்த youtube சேனல் வாயிலாக தங்களது திறமைகளையும் தனக்கு தெரிந்தவற்றையும் மக்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலமாக பலர் நல்ல வருமானத்தையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் அதன் வாயிலாக தனது பொருட்களை இணையதளத்தில் சந்தைப்படுத்தல் குறித்து பயிற்சி முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதாவது சொந்தமாக YOUTUBE சேனலை உருவாக்கி அதன் மூலம் இணையத்தில் பொருட்களை விற்பனை செய்வதற்கான பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வகுப்புகள் வரும் ஜனவரி 29ம் முதல் 31 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளன. இதற்கு ரூபாய். 4000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டமாக ஜனவரி 9ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முதல் கட்ட முகாம் நடத்தப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது 

Trending News

Latest News

You May Like