தமிழகத்தில் புதிய கூட்டணி - அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் சுவாமி தரிசனம் செய்ய வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடையே பேசுகையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர் செவத்துடன் இணைந்து அமமுக தேர்தலை சந்திக்கும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து தேனியில் ஓ.பி.எஸ் நடத்த இருக்கும் போராட்டத்தில் அவருடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தேர்தலிலும் இருவரும் ஒன்றிணைந்து சந்திக்க இருப்பதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில் சசிகலா மற்றும் டி.டி.வி தினகரனுடன் இணைந்து தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மீட்டெடுப்போம் என ஓ.பி.எஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் டிடிவி தினகரனின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்தியா, தேஜகூ தவிர மூன்றாவது கூட்டணி தமிழகத்தில் உருவாகியுள்ளது.