1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு போனஸ் அறிவிப்பு..!

1

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) ஊ மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2023-2024-இல் வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு 2,400 ரூபாயும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூபாய் 28 கோடியே 1 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது”. இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like